படப்பிடிப்பில் விபத்து! நஸ்ரியாவின காலில் ரத்தம் கொட்டியது!!

Nazriya-Nazim_with_Mammotty-son1நேரம் படம் வெளியானபோது, அதிரடியாக பல படங்களை கைப்பற்றி ஏனைய நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நஸ்ரியா.
ஆனால் அதிரடியாக அவர் வளர்ந்து வந்த நேரம், நய்யாண்டி படத்தில் தொப்புள் விவகாரத்தில் சிக்கிய நஸ்ரியாவின் மார்க்கெட்டில் இருந்த பரபரப்பு குறைந்தது. இருப்பினும், தன் மீது கிரேசாக இருந்த சில இயக்குனர்களின் படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
அப்படி புதிதாக ஜீவாவுடன் நீயெல்லாம் நல்லா வருவடா மற்றும் பாலாஜி மோகனின் வாய் மூடி பேசுவோம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நஸ்ரியா.
இதில் வாய் மூடி பேசுவோம் படத்தின் படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டிருக்கும்போது நஸ்ரியா ஸ்கூட்டியில் வருவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம்.
அப்போது, சாலையில் தண்ணீராக கிடந்ததால் நஸ்ரியா ஓட்டி வந்த ஸ்கூட்டி சறுக்கி கீழே விழுந்து விட, நஸ்ரியாவின் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம். அதையடுத்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் நஸ்ரியா.

0 comments:

Post a Comment