ஷாலினி அட்வைஸ் : நல்லவராக மாறிய அஜீத்…!

Ajith and Shalini.1சமீபகாலமாக தொடர்ந்து கெட்டவனாகவே நடித்து வந்த அஜீத், தனது மனைவி ஷாலினியின் அட்வைஸை ஏற்று வீரம் படத்தில் நல்லவராக நடித்துள்ளாராம். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம் என அஜீத் தொடர்ச்சியாக வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
மங்காத்தா படத்தில் கூட நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிக்கிறது என்று ஒரு டயலாக்கே சொன்னார் அஜீத். அஜீத்தின், ரசிகர்களும் அவரது நெகட்டிவ் நடிப்பை ரசிக்கின்றனர். இருந்தும் சிலர் தொடர்ந்து அதுபோன்று நடிப்பதை ஏற்க மறுக்கின்றனர்.
அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு கூட இது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அவர் தான் அடுத்தபடத்தில் இப்படி நடிக்காதீர்கள் என்று அட்வைஸ் பண்ணினாராம். அதனையடுத்து தான் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் வீரம் படத்தில் நல்லவனாக நடிக்க சம்மதித்தாராம்.
அண்ணன்-தம்பி பாசத்தை மையப்படுத்தி வீரம் படத்தை இயக்கி வருகிறார் சிவா. லவ், காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆக ஷாலினியின் அட்வைஸால் தான் அஜீத் நல்லவராக மாறியிருக்கிறாராம்.
மனைவி சொல்லே மந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது…!!

0 comments:

Post a Comment