ரூ.50 கோடி வசூலுடன் 50வது நாளை தொட்டது ராஜா ராணி!

29CP_RAJA_RANI1_JP_1600183fஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’யை அட்லீ டைரக்ட் செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். நாளை (நவம்பர் 15) ராஜா ராணி 50 வது நாளை தொடுகிறது.
வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 30 சதவிகித தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இதுவரை 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அட்லி கூறியதாவது “என் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னையும் என் படைப்பையும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 2014ம் ஆண்டும் இதே கம்பெனியுடன் இணைந்த ஒரு படம் இயக்க இருக்கிறேன். அது ராஜா ராணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும்” என்றார்.
“நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. புதிய, திறமையான இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க ஊக்கம் தருவதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்.
“முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அவருடன் இணைந்து தமிழ், மற்றும் இந்திப் படங்களை தயாரிக்க உள்ளோம்” என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தலைமை செயல் அதிகாரி விஜய் சிங்.

0 comments:

Post a Comment