ஆர்யா-நயன்தாராவை வைத்து ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கையில், எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கு ஏற்ற ஜோடியும் அவர் தான் என கூறியுள்ளார் நடிகர் ஆர்யா.
ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் நவ., 22ம் தேதி வெளிவர இருக்கும் படம் இரண்டாம் உலகம். வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் செல்வராகவன். அனிரூத்தின் பின்னணி இசையுடன், ஹாரிஸ் ஜெயராஜின் முன்னணி இசையும் இணைந்துள்ளது. பிவிபி சினிமாஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது ஆர்யா பேசுகையில், என் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த இரண்டாம் உலகம். பி.வி.பி சினிமாஸ் பெரிய முதலீடு போட்டு, என்னை நம்பி தயாரித்துள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், செல்வராகவனுக்கும் என் நன்றி.
நான் நடித்த நான் கடவுள், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வருஷக்கணக்கில் எடுப்பதாகவும், அதுபோன்ற படங்களில் நீங்கள் ஏன் நடிக்கணும் என பலரும் என்னிடம் கேட்கின்றனர். பாலா, செல்வராகவன் போன்றோர் வருஷக்கணக்கில் படம் எடுக்கின்றனர் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை, ஒவ்வொரு காட்சியும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகம் உழைக்கின்றனர், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
மேலும் தனக்கு பிடித்த நடிகை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கேற்ற சரியான ஜோடியும் அவர் தான் என்று கூறினார் அருகில் அனுஷ்காவை வைத்துக்கொண்டு.
0 comments:
Post a Comment