உடல் மொழியை மாற்றிய வடிவேலு

NT_131110222637000000சிறிய இடைவேளைக்கு பின், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். கடைசி கட்டமாக மீண்டும், ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், அரண்மனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்காக, தெனாலிராமன், மன்னர் என, இரண்டு கெட்டப்புகளில் நடித்து வரும் வடிவேலு, ஒரு கேரக்டருக்கும், மற்றொரு கேரக்டருக்குமிடையே, வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, தன் உடல் மொழியை (பாடி லாங்குவேஜ்) முழுவதுமாக மாற்றி நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் நடித்த, இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல், நடிப்பிலோ, வசனத்திலோ துளியும் இல்லாத அளவுக்கு மிகவும் கவனமாக நடித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment