கமல் படத்தில் முதன்முறையாக காஜல்அகர்வால், சந்தானம், யுவன்ஷங்கர்ராஜா!



mqdefault copyவிஸ்வரூபம் 2 பட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல். அவரது 59வது பிறந்த நாளான நவம்பர் 7-ந்தேதி அப்படம் வெளியாகும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த பிறந்த நாளில் அது நடக்கவில்லை என்பதோடு, அப்படம் சம்பந்தமான எந்த தகவலையும வெளியிடவில்லை கமல். அன்றைய தினம் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய கமல், நடிகை ஸ்ரீப்ரியாவின் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டவர், அதே விழாவுக்கு வந்திருந்த தனது குருநாதர் கே.பாலசந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.
மேலும், விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமாக நடந்த வரும் நிலையில், கமல் அடுத்து நடிக்கப்போகிற உத்தமவில்லன் படம் பற்றிய செய்திகள் தற்போது அதிகமாக உலவத் தொடங்கியுள்ளது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்பட்ட காஜல்அகர்வால் அப்படத்திலிருந்து விலகி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
ஆனால், இப்போது அது பொய்யான தகவல் என்கிறார்கள். அப்படத்தில் காஜல் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாம். அதேபோல், எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்து விட்டு கமலுடன் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த சந்தானம் இபபடத்தில் நடிப்பதோடு, யுவன்ஷங்கர்ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
ஆக, காஜல்அகர்வால், சந்தானம், யுவன்ஷங்கர்ராஜா ஆகிய மூன்று பேரும் இப்படம் மூலம் முதன்முறையாக கமல் படத்தில் இடம்பெறும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment