என்னதான் ஒல்லிக்குச்சியான உடல்கட்டு என்றாலும், ஆக்சன் கதை என்கிறபோது கைக்கு 10 பேரை பந்தாடவும் தயாராகி விடுகிறார் தனுஷ். அதற்காக தனது தலைமுடி, பாடி லாங்குவேஜ் ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த கேரக்டரை மெருகேற்றி விடுகிறார்.
இப்படி கதைக்கேற்ப தனது கெட்டப்பை பக்காவாக மாற்றிக்கொண்டு நடித்து வரும் தனுஷ், தற்போது தான் தயாரித்து நடித்து வரும் படம் ”வேலையில்லா பட்டதாரி”.
படத்தின் கதைப்படி படித்து விட்டு வேலையில்லாமல் போராடும் இளைஞனின் கதை என்பதால், தன்னை இன்னும் யூத்தாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக 3 படத்தைப்போலவே மீசை இல்லாமல் நடிக்கிறாராம்.
மேலும், 3 படத்தில் தனுஷால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். முதல் படத்திலேயே தனுசும்-அனிருத்தும் கைகோர்த்து ஒய்திஸ் கொலவெறி என்றொரு அதிரடி பாடலை கொடுத்தவர்கள் என்பதால், இந்த படத்திலும் பட்டயக் கிளப்பும் வகையில் ஒரு அதிரடியான பாடலை ரெடி பண்ணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், ஓய்வு கிடைக்கும் நாட்களில் அனிருத்தை அழைத்து நிறைய டியூன் போடச்சொல்லி கேட்கும் தனுஷ், கொலவெறியை மிஞ்சும் அதிரடி டியூன் இன்னும் சிக்காததால் தொடர்ந்து அனிருத்தை புது டியூன் கேட்டு நொங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment