3-டியில் வெளியாகிறது ஷோலே…!!

ff986633-a81f-402b-b2ff-0fa4f59569e0OtherImage1975-ஆண்டு வெளிவந்து இந்தியா முழுக்க ஒரு கலக்கு கலக்கிய படம் ”ஷோலே”. இப்படம் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமாமாலினி, ஜெயபாதுரி பச்சன், அம்ஜத் கான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் ஷோலே. ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படம் மட்டுமல்லாது இப்படத்தில் இடம்பெற்ற பாட்டுகளும் சூப்பர் ஹிட்டானது.
இதில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் பெரும் வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் கலெக்ஷ்னை அள்ளியது.
இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டியில் மெருகேற்றி உள்ளனர். சுமார் ரூ.25 கோடியில், 3டி தொழில்நுட்பத்தில், டி.டி.எஸ் சவுண்ட் மிக்ஸிங் எல்லாம் சேர்த்து மெருகூட்டப்பட்ட இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் புதுப்பொலிவுடன் வெளிவர இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் புது டிரைலர் வெளிவர இருக்கிறது. இந்த புது டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

0 comments:

Post a Comment