இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ள படம் ‘ருத்ரம்மா தேவி’. இதில் நடிகை அனுஷ்கா ருத்ரம்மா தேவியாகவும், நடிகர் ராணா இளவரசர் சாளுக்கியா வீரபத்திராவாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் இந்தியாவின் பிரபல ‘ராப்’ இசைப் பாடகரான பாபா செகல் அறிமுகமாகிறார். இயக்குனர் இப்படத்தில் நடிப்பது குறித்து அவரை அணுகியபோது பாபா தயக்கமின்றி சம்மதம் தெரிவித்து விட்டார்.
ராணியாகத் தோன்றும் அனுஷ்காவிற்கு இதில் சண்டைக்காட்சிகளும் உண்டு. இவருடன் தானும் சேர்ந்து நடிக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதினால் பாபா செகல் இந்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று சூட்டிங் நடைபெறம் விதத்தையும் அவர் கண்டு களித்து வருகின்றார். சரித்திரப் பின்னணியில் இப்படி ஒரு திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனரிடமும் தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்துள்ளார்.
‘ருத்ரம்மா தேவி’ வரலாற்றுப் பின்னணியுடன் வெளிவரும் முதல் ’3டி’ படம் ஆகும். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment