அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட பட்ஜெட் படம் ராணி ருத்ரம்மா தேவி. இப்படத்துக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்சி எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.
முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் ஆக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய இயக்குனர் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளை படமாக்கி வருகிறார்.
அதில் அந்த காலத்து கவர்ச்சி ஆடைகளை அணிந்தபடி அனுஷ்கா நடனமாடும் அந்தப்புர பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினாராம். காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக அனுஷ்காவிற்கு ஆடை குறைத்து அணிகலன்களைக்கொண்டே உடம்பை மறைத்தபடி அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால், அந்த காட்சியை ஒட்டுமொத்த யூனிட்டும் வெறிக்க வெறிக்க வேடிக்கைப்பார்த்தால் வெட்கத்தில் நெளிந்தாராம் அனுஷ்கா. அதனால், கூடி நின்று வேடிக்கைப்பார்த்த யூனிட் நபர்களை வெளியேற்றி விட்டு, இயக்குனர், கேமராமேன் உள்பட சிலர் மட்டும் அந்த காட்சியை படமாக்கினார்களாம். அதன் பிறகே வெட்கத்தை ஓரங்கட்டிவிட்டு நடித்தாராம் அனுஷ்கா.
0 comments:
Post a Comment