செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அனுஷ்கா சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் எடுத்துள்ளனர்.
அனுஷ்கா திரையுலகிற்கு வருவதற்கு முன்பே ஐதராபாத்தில் வாள் வீச்சு சண்டையை முறைப்படியாக கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘அருந்ததி’ படத்தில் கத்தி சண்டைகளில் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்திலும் இவர் லாவகமாக வாள் சண்டையிடும் காட்சியை பார்த்த படக்குழுவினர் வியந்து போயுள்ளனர். வில்லன்களுடன் மட்டுமல்லாமல் கதாநாயகன் ஆர்யாவுடனும் சண்டை போடும் காட்சியும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ், ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துருக்கி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அனுஷ்கா தற்போது ‘பஹூபலி’, ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக குதிரையேற்றமும், பாரம்பரிய தற்காப்பு கலைகளும் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment