அஜீத்-விஜய் பட வில்லனுடன் மோதும் சூர்யா

fcf5a2c9-42e4-4605-b1fe-918e1042ef7f_S_secvpfசூர்யா-லிங்குசாமி இணைந்திருக்கும் புதிய படம் தொழில்நுட்ப ரீதியிலும், நடிகர்கள் அளவிலும் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை உபயோகித்து படமாக்குகின்றனர்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியில் வெளியான ‘சத்யா’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். இப்படத்தில் இவர்தான் முக்கிய வில்லனாம்.
இன்னொரு வில்லனாக அஜீத்-விஜய் ஆகியோரின் படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்கிறாராம். வித்யூத் ஜம்வால் அஜீத்துடன் ‘பில்லா-2’, விஜய் உடன் ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். தற்போது சூர்யாவுடன் சண்டை போடப் போகிறார்.

0 comments:

Post a Comment