பேஸ்புக் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது: மாணவி தற்கொலை

faceebook_001மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியை சேர்ந்த சுனில், தஹிவாமகள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்.
இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதிக நேரம் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை கண்டு கவலை அடைந்த அவரது பெற்றோர் இத்தகைய வலைத்தளங்களையும், கைப்பேசியையும் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நிறைய நேரம் செலவழிப்பதை கண்ட பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கோபமடைந்த ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர் தன்னை இதுபோல் அடிக்கடி தடுப்பதாகவும், இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது என்றும் பேஸ்புக் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது எனவும் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தால் ஐஸ்வர்யாவின் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment