வெளியானது விஸ்வரூபம் 2 ட்ரைலர் (வீடியோ இணைப்பு)

vishwaroopam_2_002கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகியுள்ளது.
கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.
ராணுவ அதிகாரியாக கமல் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவருடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் அசத்தலான ட்ரைலர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
எம்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.



0 comments:

Post a Comment